• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நீண்ட காலமாக அப்புறப்படுத்தாமல் தேங்கி நிற்கும் மழைநீர்!

  • Share on

தூத்துக்குடியில் நீண்ட காலமாக தேங்கி நிற்கும் கழிவுநீர் கலந்த மழைநீர் அகற்றப்படாததால் அங்கு சுகாதார சீர் கேடு நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி 17வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ் நகர் 11வது தெரு மேற்கு பகுதியில் பல நாட்களாக தேங்கி கிடக்கும் மழைநீரானது , தற்போது தூர்நாற்றம் வீசக்கூடிய அளவிற்கு சாக்கடையாக மாறி சுகாதரமற்ற நிலையை அடைந்துள்ளது.

எனவே, இந்த தேங்கிய மழை நீரை அகற்ற பல முறை முறையிட்டும் மாநகராட்சி நிர்வாகம் அகற்ற துளியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தற்போது மழை பெய்து வரும் நிலையில், தொடர்ந்து இன்னும் 2, 3 நாட்கள் மழை பெய்தால் அங்கு அருகில் உள்ள வீடு நீரில் மூழ்கும் நிலை கூட வரக்கூடும். மேலும், அங்கு வசிக்கக்கூடிய பொதுமக்களின் சுகாதாரமும் கேள்வி குறியாகவே உள்ளது என அப்பகுதி மக்களிடையே புகார் எழுந்துள்ளது.

எனவே மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கலந்த மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share on

தூத்துக்குடி அருகே டிராவல்ஸ் உரிமையாளரை வெட்டியவருக்கு 4 ஆண்டு சிறை!

தூத்துக்குடியில் காவல் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் போராட்டம்!

  • Share on