• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே டிராவல்ஸ் உரிமையாளரை வெட்டியவருக்கு 4 ஆண்டு சிறை!

  • Share on

சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரத்தை சேர்ந்தவர் லிங்கதுரை, டிராவல்ஸ் வைத்துள்ளார். இவர் தனது வேனை தூத்துக்குடி புதிய பஸ் நிலைய பகுதியில் 4 சக்கர வாகன ஒர்க் ஷாப் நடத்தி வரும் சிவத்தையாபுரத்தை சேர்ந்த ஆதித்தன்(44) என்பவரிடம் பழுது பார்ப்பதற்காக விட்டு இருந்தாராம். அப்போது வேனில் இருந்த பொருட் கள் காணாமல் போனது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் கடந்த 24.3.2013 அன்று மாலையில் லிங்கதுரை தனது மகளுடன் கோயிலுக்கு செல்வதற்காக தனது வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஆதித்தன், அவரது நண்பர் கண்ணன்(42) ஆகிய இருவரும் லிங்கதுரையிடம் தகராறு செய்து, மறைத்து வைத்து இருந்த அரிவாளால் லிங்கதுரையை வெட்டியுள்ளனர். இதனை தடுக்க வந்த அவரது மகள் சுபாலட்சுமிக்கும் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் ஆதித்தன், கண்ணன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி பிஸ்மிதா, குற்றம்சாட்டப்பட்ட ஆதித்தனுக்கு 4 ஆண்டு சிறை தண் னையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். கண்ணன் விடுதலை செய்யப்பட்டார்.

  • Share on

மாப்பிள்ளையூரணி கிராமசபை கூட்டம் - முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!

தூத்துக்குடியில் நீண்ட காலமாக அப்புறப்படுத்தாமல் தேங்கி நிற்கும் மழைநீர்!

  • Share on