தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 45வது வாா்டில் பகுதி சபை கூட்டம் பிரையண்ட் நகர் 12 வது தெரு மேற்கு பகுதியில் நடைபெற்றது.
தமிழகத்தில் நவம்பா் 1ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு ஒளிவு மறைவற்ற வெளிப்படத்தன்மையினை ஏற்படுத்த வேண்டியும், உள்ளாட்சி அமைப்புகளின் சாதனை மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகுதி சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (நவ.1) தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 60 வாா்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 45வது வாா்டில் பகுதி சபை கூட்டம் பிரையண்ட் நகர் 12 வது தெரு மேற்கு பகுதியில், வார்டு குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் தலைமையில், மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநகராட்சி அலுவலர் மகாலெட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில், 45வது வாா்டில் நடைபெறும் வளா்ச்சி பணிகள் குறித்த பட்டியல், அனைத்து திட்டங்கள் குறித்த பட்டியல் உள்ளிட்டவைகள் பொதுமக்களிடையே தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், அந்த பகுதியில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
இக்கூட்டத்தில் மதிமுக மாநகரச் செயலாளர் முருகபூபதி, தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணப்பெருமாள், வார்டு பொதுமக்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.