தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவ முகாமில், 100 பேருக்கு 5 லட்சத்திற்கான பாரத பிரதமர் மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், 2 ம் கேட் அருகே உள்ள வட்டகோவில் பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு , பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பாஜகவினர் கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ முகாமில், 100 பேருக்கு 5 லட்சத்திற்கான பாரத பிரதமர் மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது. மேலும், வட்டகோவில், ஸ்டேட் பாங்க் காலனி, கந்தசாமிபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 1000 பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், சக்தி விநாயகபுரத்தில் 26.12.2020 (சனிக்கிழமை) அன்றும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறாலாம் எனவும் தெரிவித்தனர்.
இந்நிகழ்விற்கு, பாஜக வடக்கு மண்டல பொது செயலாளர் வினோத் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர் கனகராஜ், ஓ.பி.சி அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் பொன்குமரன், வடக்கு மண்டல தலைவர் கனகராஜ், மண்டல பொதுச் செயலாளர் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாநில செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, தெற்கு மாவட்ட செயலாளர் மான்சிங், கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நவனிதன் மற்றும் பேச்சிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.