• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியை அடுத்த மறவன்மடம் பேருந்து நிறுத்தம் அருகே வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ் மேற்பார்வையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துவீரப்பன் மற்றும் போலீசார் நேற்று (30.10.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மறவன்மடம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் மறவன்மடம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் மகன் நகுர் பாண்டி (21) மற்றும் பழையகாயல் கச்சேரி தெருவைச் சேர்ந்த சின்னத்துரை மகன் ரெங்கராஜ் (22) என்பதும் அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் நகுர் பாண்டி மற்றும் ரெங்கராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட  நகுர் பாண்டி மீது ஏற்கனவே புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், முறப்பநாடு மற்றும் சிப்காட் காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கும், ரெங்கராஜ் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் - அதிமுக உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக வரவேற்பு!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியிடங்கள்: நவ.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

  • Share on