தூத்துக்குடி மாநகராட்சி கூட்ட அரங்கில் அவசர கூட்டம் இன்று(31.10.2022) நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழக அரசு உத்தரவின்படி தூத்துக்குடியில் குருஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரோச் பூங்கா பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடம் ஒதுக்குப்புறமாக இருப்பதாகவும், மாநகர மையப் பகுதியில் அதை அமைக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில், ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழ்சாலையில் உள்ள எம்ஜிஆர் பூங்கா கிழக்கு பகுதியில் 20 சென்ட் இடம் .ஒதுக்கப்பட்டு அதில் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இன்று தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டம் கூட்டத்தில், குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் கட்ட தமிழ்சாலையில் உள்ள எம்ஜிஆர் பூங்கா கிழக்கு பகுதி இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக வரவேற்று, நன்றி தெரிவித்தனர்.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் நகர்புற உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், நகர்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் திட்ட வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்த ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் ஒருநபரை வார்டு குழு உறுப்பினராக பகுதி சபா உறுப்பினர்கள் தேர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, செயற்பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ்; திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் தனசிங், காந்திமதி, சேகர், நகர்நல அலுவலர் அருண்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராமர், கண்ணன், ஜாக்குலின்ஜெயா, வைதேகி, முத்துவேல், தனலட்சுமி, பவானி மார்ஷல், மெட்டில்டா, ரிக்டா, மரியகீதா, சரண்யா, தெய்வேந்திரன், கந்தசாமி, சுயம்பு, பச்சிராஜ், ராஜதுரை, ரெங்கசாமி, மும்தாஜ், முத்துமாரி, ராமகிருஷ்ணன், ஜாண்சிராணி, அதிர்ஷ்டமணி, விஜயலெட்சுமி, சந்திரபோஸ், கற்பககனி, ஜெயசீலி, எடின்டா, பொன்னப்பன், சரண்யா, சோமசுந்தரி, அதிமுக கவுன்சிலர்கள் வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, வெற்றிசெல்வன், வீரபாகு, விஜயலட்சுமி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.