• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி பண்பு பயிற்சி முகாம்!

  • Share on

தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாநகர் மாவட்ட இந்து முன்னணி பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை, இந்து அன்னையர் முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் சொர்ண சுந்தரி  திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர்  பொன்னையா கலந்து கொண்டார்.

இதில், இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் நாராயணன் ராஜ், மாவட்ட  செயலாளர்கள் எல்.ஆர். சரவணகுமார்,  ராகவேந்திரா, சிவலிங்கம், மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலவேசம், மாரியப்பன், வினோத்குமார், கவின் சண்முகம், மேற்கு மண்டல பொறுப்பாளர்கள் சுதாகர் ஆறுமுகம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொறுப்பாளர் சிபு, சுடலைச்செல்வம், இந்து முன்னணி வழக்கறிஞர் மாவட்டச் செயலாளர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் இந்திராகாந்தி நினைவு தினம் : மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மரியாதை!

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் - அதிமுக உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக வரவேற்பு!

  • Share on