• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இந்திராகாந்தி நினைவு தினம் : மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மரியாதை!

  • Share on

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் சி.எஸ் முரளிதரன் தலைமையில், தூத்துக்குடி கீழூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் அருள், பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், மாமன்ற உறுப்பினர் எடிண்டா, மண்டல தலைவர்கள் ஐசன்சில்வா, செந்தூர்பாண்டி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நீர்மல்கிறிஸ்டோபர், மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி, மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி பீரித்தி, மாவட்ட துணை தலைவர்கள் பிரபாகரன், அருணாசலம், ஜெபராஜ், ஜோபாய்பச்சேக், மைக்கேல், சின்னகாளை, மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, முத்துராஜ், அழகுவேல், சண்முகசுந்தரம், மகாலிங்கம், ஜெயராஜ், தனுஷ், ஜாண்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி-மைசூரு இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே தகவல்

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி பண்பு பயிற்சி முகாம்!

  • Share on