• vilasalnews@gmail.com

தேவர் ஜெயந்தி விழா - சமத்துவ மக்கள் கழகம் மரியாதை!

  • Share on

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 60ஆவது குருபூஜையை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே உள்ள தேவர் சிலைக்கு தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில், சமத்துவ மக்கள் கழக மாநில பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பாலசேகர், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் கல்பனா தேனி, மாவட்டச் செயலாளர்கள் கோகுல கண்ணன், ஏ பி கண்ணன், அய்யனார், சுரேஷ், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் தேவர் சிலைக்கு மரியாதை

தூத்துக்குடியில் 3வது மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ரவிசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் மில்லை தேவராஜ், மாவட்ட பிரதிநிதி பழனிவேல், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம், மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாநகர அவை தலைவர் மதியழகன், மற்றும் காமராஜ், சுந்தர், மைக்கேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழா - திருவுருவச் சிலைக்கு மதிமுக மரியாதை

எட்டையபுரத்தில் தேவர் ஜெயந்தி விழா - அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

  • Share on