முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் கோடையடி ராமச்சந்திரன், மதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கேசவ நாரயணன், மாவட்ட பிரதிநிதி முத்துப்பாண்டி, நகர துணை செயலாளர் வனராஜன், கிளை செயலாளர்கள் செண்பகராஜ், நாகராஜ், அரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன் செய்திருந்தார்.