• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது - 409 மதுபாட்டில்கள் பறிமுதல்

  • Share on

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக  மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 409 மதுபாட்டில்கள் பறிமுதல்  செய்யப்பட்டன.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான காவலர்கள் 24.12.2020 அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி அமுதா நகர், 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் கீழசெக்காரக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த கலியா மகன் சுப்பையா (60) மற்றும் தூத்துக்குடி, கதிர்வேல்நகரைச் சேர்ந்த பன்னீர் பெருமாள் மகன் செந்தில் விநாயகம் (45) ஆகியோர் சட்டவிரோத விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து சுப்பையா மற்றும் செந்தில் விநாயகம் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 409 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

  • Share on

எம்ஜிஆரின் 33-ம் ஆண்டு நினைவு தினம்: விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மலரஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 97 வது பிறந்தநாள் விழா : 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு வழங்கல்!

  • Share on