தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது, ஆணையாளர் சாருஸ்ரீ,துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், முன்னிலை வகித்தனர்,
கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி உள்ளாட்சி அமைப்புகளில் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், பொதுமக்களின் பங்கேற்பு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தவும் மாநகராட்சி சட்டப்பிரிவுகளின்படி வார்டு குழு மற்றும் பகுதிசபா அமைக்கவும் அதற்கு வார்டு கவுன்சிலர் தலைவராகவும் வாக்குரிமை பெற்ற பகுதி வாசிகள் பகுதிசபா குழு உறுப்பினர்களாகவும் மாநகராட்சி அனுமதி பெற்று நியமித்திடவும் இந்தக் குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்படவும் அதற்கான அஜெண்டா தயாரிக்கவும் கவுன்சிலர் கூட்டம் நடத்த தவறினால் ஆணையாளர் கூட்டத்தை நடத்தவும் அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது எனவே வார்டு குழு மற்றும் பகுதிசபா 60 வார்டுகளிலும் அமைக்க அரசாணை மற்றும் அரசிதழ் அறிக்கையினை மாமன்றத்தில் முதல் தீர்மானமாக சமர்ப்பிக்கப்படுகிறது என்று கூறினார் தொடர்ந்து
தீர்மானங்கள் -
மலேரியா கொசு ஒழிப்புக்காக மருந்து கொள்முதல் செய்தல், சிவந்தாகுளத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதால் இடவசதி ஏற்படுத்தும் வகையில் கூடுதல் வகுப்பறை கட்டுதல், முத்தம்மாள் காலனியில் புதிய ரேஷன் கடை கட்டுதல்திடக்கழிவு மேலாண்மை பணிக்கு துப்புரவு பணி மேற்கொள்ள தினக்கூலி அடிப்படையில் இரு வேறு நிறுவனங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 300 தொழிலாளர்கள் 15 மேற்பார்வையாளர்கள் பொது சுகாதார பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் அவர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்தல்,
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 434 தனிநபர் கழிப்பிடங்கள் அமைக்க மான்ய நிதி அளித்தல்,
மாநகராட்சி பராமரிப்பில் உள்ள திருச்செந்தூர் ரோடு முள்ளக்காடு ஊரணி 1 கோடியே 9 லட்சத்தில் சீரமைத்து மேம்படுத்தவும், பண்டாரம் பட்டியில் உள்ள முள்ளிகுளம் 1 கோடியை 94 லட்சத்தில் சீரமைத்து மேம்படுத்தவும், அம்ரூத் 2.0 2022-2023 திட்டத்தில் நிதி ஒதுக்கீடு அனுமதித்தல்,
தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ராம்நகர், ரஹ்மத்நகர், ஆர்.எஸ்.பி.நகர், குரூஸ்புரம், காளியப்பர்தெரு, ஹவுசிங் போர்டு சுற்றுப்புற பகுதிகளில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்தல், இதேபோல் திரேஸ்புரம், மேட்டுப்பட்டி பள்ளிவாசல்,மாதா நகர் காலனி, போல்பேட்டை சுற்றுப்புற பகுதிகள், அண்ணாநகர், பிரையண்ட் நகர், சின்னமணி நகர் தெரு பகுதிகள், ஆசிரியர் காலனி சுற்றுப்புற பகுதிகளில் புதிய சாலை அமைக்க ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்தல், அழகேசபுரம், நந்தகோபாலபுரம், பங்களா தெரு, பக்கிள்புரம், லெவிஞ்சிபுரம், முனியசாமிபுரம் பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்ககும் பணிகள்,
உள்ளாட்சி அமைப்பு திட்டப் பணிகளுக்கு மான்யம் பெறுவதற்கு மொத்த ஆண்டு மதிப்பில் சொத்து வரி எவ்வளவு என்றும், மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி விதிப்பில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது, எனவே சொத்துவரி, காலிமனை வரி சீராய்வு செய்வதற்கு மாநகராட்சி பகுதிகளில் கட்டப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கு அவற்றின் அமைவிடம், கட்டுமானத்தின் தன்மை மற்றும் பயன்பாடு அடிப்படையில் பரப்பளவிற்கு ஏற்றவாறு நான்கு வகைகளாக பிரித்து மண்டல மதிப்புகளின் அடிப்படையில் சொத்து வரி சீராய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டதன் பெயரில் , தூத்துக்குடி மாநகராட்சியில் 1-4-2022 முதல் காலி மனை வரி உயர்வு செய்து பொது சீராய்வு மேற்கொள்ள மண்டலங்கள் வாரியாக நிர்ணயம் செய்ய சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கையினபடி காலிமனை பொது சீராய்வு மேற்கொள்ள அனுமதி கோருதல், உட்பட தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது,
கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், குழு தலைவர்வர்கள் ராமகிருஷ்ணன், கீதாமுருகேசன், சுரேஷ்குமார், அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு,பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் டாக்டர் அருண்குமார், சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.