• vilasalnews@gmail.com

கெச்சிலாபுரம் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டும் பணிகள் : மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்!

  • Share on

கெச்சிலாபுரத்தில் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூர் ஊராட்சி, கெச்சிலாபுரம் கிராமத்தில் முன்னாள் மாணவர்கள் சார்பாக  ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய 5 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.

நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் இம்மானுவேல், பள்ளி தலைமை ஆசிரியை பாண்டியம்மாள், மாவட்ட பிரதிநிதி செல்வபாண்டி, ஒன்றிய அவைத் தலைவர் கெங்குமணி, ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி, ஊர் தலைவர் மாரியப்பன், துணைத் தலைவர் சண்முகசுந்தர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

பூக்கடைகளை கோயிலின் வெளியில் அமைக்கலாமா? செயல் அலுவலர் விளக்கமளிக்க உத்தரவு!

மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் - பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!

  • Share on