பூக்கடைகளை கோயிலின் வெளியில் அமைப்பது குறித்து செயல் அலுவலர் விளக்கமளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த வசந்தகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தூத்துக்குடியில் 400 ஆண்டு பழமையான சங்கரராமேஸ்வரர் கோயில் மற்றும் வைகுண்டபதி கோயில்கள் உள்ளன. தற்போது பூக்கடை மற்றும் பிரசாத கடைகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
20 அடி அகலம் மட்டுமே உள்ள நுழைவாயில் பகுதியில் கடைகள் அமைத்துள்ளதால் பக்தர்கள் சென்று வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. பழமையான சிற்பங்கள் மறைக்கப்படுகிறது. எனவே, நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள கடைகளை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், கோயில் வளா கத்தில் வணிக ரீதியாக கடைகள் செயல்பட அனுமதிக்க முடியாது. பூக்கடைகளை கோயிலின் வெளிப்பகுதியில் அமைப்பது தொடர்பாக கோயில் செயல் அலுவலர் தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.