தூத்துக்குடி மாநகருக்கு அழகுசேர்க்கும் வகையில், புதிய நம்ம தூத்துக்குடி செல்பி பாயிண்ட் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி சிறந்த மாநகராட்சி என்ற லட்சியத்தை அடையவேண்டும் என்ற எண்ணத்தோடு, மேயர் ஜெகன் பணியாற்றிவருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகருக்கு அழகுசேர்க்கும் வகையில், 3வது ரயில்வே கேட் மேம்பாலம் அருகில், ஜெயராஜ் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட நம்ம தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டை , தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.