திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான ஜூடோ சேம்பியன்சிப் போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு பதக்கங்களை பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான ஜூடோ சேம்பியன்சிப் போட்டியில் தூத்துக்குடி ஸ்ரீ காமாக்ஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கேத்தீஸ்வரன், பாலமுருகன், துர்கா ஸ்ரீதேவி, மகிஷா பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டதில் மகிஷா பிரியங்கா வெள்ளிப் பதக்கமும் துர்கா ஸ்ரீதேவி வெண்கல பதக்கமும் வெற்றி பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
வெற்றி பெற்ற மாணவிகளையும் பயிற்சியாளர் இராமலிங்க பாரதி, பள்ளி தாளாளர் அருணாச்சலம், பள்ளி முதல்வர் மீனாகுமாரி, துணை முதல்வர் சுப்புலட்சுமி மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும் வாழ்த்தி பாராட்டினார்கள்.