தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையத்தில், சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாடார் மகாஜன சங்கத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு வேட்பாளர் என்.ஆர். தனபாலனுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்க தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த, நாடார் பேரவையின் மாநில தலைவரும் சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவரும் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணனை,
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இதில் மாநில பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை, மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், மில்லை தேவராஜ், மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ் குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம்,மாநகரச் செயலாளர் உதயசூரியன், ஶ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.