• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நாளை (20ம் தேதி) மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

  • Share on

மாதாந்திர பராமரிப்பு பணிகளையொட்டி தூத்துக்குடி பீச் ரோடு துணை மின்நிலைய பகுதிகளில் நாளை (20ம் தேதி) மின் தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின் விநியோக செயற்பொறியாளர் ராம்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி பீச்ரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (20ம் தேதி) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதன் காரணமாக இனிகோநகர், ரோச்காலனி, சகாய புரம், மினி சகாய பு ரம், மாதா தோட்டம், கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள உப்பள பகுதிகளில் நாளை (20ம் தேதி) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி சிவன் கோவில் தேரோட்டம்

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நாளை (20ம்தேதி) நடப்பதை முன்னிட்டு நாளை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை தூத்துக்குடி தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு,

கீழரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, வ.உ.சி. ரோடு, டி.ஆர். நாயுடு தெரு, பங்களா தெரு, வரதராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தூத்துக்குடி நகர மின்வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு பாராட்டு... 108 ஆம்புலன்ஸ் சேவை உதவவில்லை!

முதலாளியும் தொழிலாளியும் இரு கண்கள் - மேயர் ஜெகன் பெரியசாமி

  • Share on