• vilasalnews@gmail.com

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு பாராட்டு... 108 ஆம்புலன்ஸ் சேவை உதவவில்லை!

  • Share on

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணை ஆணைய அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

தூத்துக்குடி சம்பவத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்தால் அவற்றை திறம்பட பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அதுசார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு இல்லாததால், 108 ஆம்புலன்சின் மருத்துவ உதவிகள் உரிய நேரத்தில் உரிய பயனாளிகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது. அதன் சேவை திசைமாறி சென்றுவிட்டது. ஆனால் கொடுங்காயம் அடைந்தவர்களையும், உயிருக்கு போராடியவர்களையும் தனியார் ஆம்புலன்சில் கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க.) என்ற சேவை அமைப்பு, சாதி, இனம், மதம் போன்றவற்றை பாராமல் மனிதநேயத்தை கருத்தில் கொண்டு செய்த சேவை, விலை மதிப்பற்றது. 

அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 12 பேரும் (பின்னர் இறந்துவிட்டனர்) 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்படவில்லை. த.மு.மு.க. மற்றும் நல்லதம்பி தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளனர். 

மயிரிழையில் உயிர் தப்பியிருப்பவர்களையும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தான் கொண்டு வரப்பட்டனரே தவிர, 108 ஆம்புலன்சில் கொண்டு வரப்படவில்லை.

பி.செந்தில்குமார் என்பவரும் தனது உயிரை நினைத்து பயப்படாமல் இறந்தவர்களையும், காயம்பட்டவர்களையும் நல்ல தம்பி மருத்துவமனையின் ஆம்பு லன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இதுபோன்ற தனியார் தன்னிச்சையுடனும், தன்னார்வத்துடனும் உதவி செய்யாதிருந்தால் மேலும் பல உயிர்களை இழந்திருப்போம். எனவே இவர்களுக்கு பாராட்டுகள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Share on

எட்டயபுரத்தில் அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு கொண்டாட்டம் - எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

தூத்துக்குடியில் நாளை (20ம் தேதி) மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

  • Share on