• vilasalnews@gmail.com

எம்ஜிஆரின் 33-ம் ஆண்டு நினைவு தினம்: விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மலரஞ்சலி செலுத்தினார்.

  • Share on
ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில்  எம்ஜிஆரின் 33-ம் ஆண்டு நினைவு தினம்: விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்  மலரஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வரும் , அதிமுக நிறுவன தலைவருமான எம்ஜிஆரின் 33-வது ஆண்டு நினைவு தினம்  24-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி , ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில்  , முன்னாள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பெருங்குழு தலைவரும் , கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான இரா.காந்தி ( எ ) காமாட்சி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு , அலங்கரித்து வைக்கப்படிருந்த எம்ஜிஆர் திருஉருவப்படத்திற்கு,  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்  கலந்து கொண்டு மாலை அணிவித்தும்,  மலர்தூவியும் மரியாதை செய்தார். இந்நிகழ்வில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
  • Share on

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஜனவரி 19ல் ரஜினி ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்!!

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது - 409 மதுபாட்டில்கள் பறிமுதல்

  • Share on