அதிமுக பொன்விழா ஆண்டை நிறைவு செய்து 51-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைப்பதையொட்டி எட்டயபுரம் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா இன்று அக்கட்சியின் சார்பில் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, எட்டையபுரத்தில், வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ., ஆலோசனையின் படி எட்டயபுரம் நகர அதிமுக சார்பில், சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நகர துணைச் செயலாளர் சிவ மாரியப்பன், இலக்கிய அணி செயலாளர் வேலுச்சாமி, மகளிரணி செயலாளர் செல்வி, வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.