• vilasalnews@gmail.com

எப்போதும்வென்றான் அருகே லாரி திருட்டு: வாலிபர் கைது!

  • Share on

எப்போதும்வென்றான் அருகே ரூ.25லட்சம் மதிப்புள்ள லாரியை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மா நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் (32). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 4ம் தேதி எப்போதும் வென்றான், கழுகாசலபுரம் குடோன் அருகே நிறுத்தியிருந்த அவரது லாரி திருடுபோய்விட்டது. இதன் மதிப்பு ரூ.25லட்சம் ஆகும். 

இதுகுறித்து எப்போதும் வென்றான் காவல் நிலையத்தில் அன்பழகன் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் நடுக்கூட்டுடன் காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முனியசாமி (39) என்பவர் லாரியை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்

  • Share on

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோவில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை - அலைமோதும் மக்கள் கூட்டம்!!

திருச்செந்தூர் கோயிலில் சஷ்டி விரதம் இருக்க அனுமதி மறுப்பா? அறங்காவல் குழு தலைவர் விளக்கம்!

  • Share on