• vilasalnews@gmail.com

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்: சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் மரியாதை!

  • Share on

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவு தினம் இன்று ( அக்.,16 )  அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள அவரது சிலைக்கு விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஞ்செயன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி, மாவட்ட பிரதிநிதியும் முன்னாள் வைப்பார் ஊராட்சி மன்ற தலைவருமான செண்பகப்பெருமாள், புதூர் வட்டார ராஜகம்பள மகாஜன சங்க செயலாளர் சேதுபாண்டியன், புதூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மோகன், சிறுபான்மையினர் நல பிரிவு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், புதூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் சுரேஷ் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

கோவில்பட்டியில் வைகோ எம்பி.,யுடன் த.வீ.க.ப.க நிர்வாகிகள் சந்திப்பு!

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோவில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை - அலைமோதும் மக்கள் கூட்டம்!!

  • Share on