புதுக்கோட்டையில் இந்தி திணிப்பு திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவர் அணி சார்பில் புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாணவரணி அமைப்பாளர், அருண்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான டேவிட் செல்வின், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுபப்பட்டன.
இதில், தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுக பெருமாள், ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார், ஜெயக்கொடி, சுப்பிரமணி, ஜோசப், சுரேஷ் காந்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அம்பா சங்கர், அனக்ஸ், மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், ஆத்தூர் பேரூராட்சி செயலாளர் முருகானந்தம், பேரூராட்சி மன்ற தலைவர் கமாலுதீன், ஆவீன் சேர்மன் சுரேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர் மணி, மாடசாமி, தெற்கு மாவட்ட அணி அமைப்பாளர்கள் வீரபாகு, ராஜேந்திரன், ரவி என்ற பொன்பாண்டி, ஆஸ்கர், துணை அமைப்பாளர்கள் ரெங்கசாமி, கணேசன், ரகுராமன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் பிரம்மசக்தி, ஜெஸிபொன்ராணி, மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணி முத்து, நெல்சன், நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, ஒன்றிய துணை செயலாளர்கள் ராமச்சந்திரன், ஹரி பாலகிருஷ்ணன், பகுதி செயலாளர் சிவக்குமார், குமாரகிரி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முப்பிலியன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் பொன்னுச்சாமி, கபடி கந்தன், வழக்கறிஞர் கிருபாகரன் மறற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவர் அணியை சேர்ந்த நிர்வாகிகள், திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.