கயத்தாறில் நடைபெறும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு புகழ் அஞ்சலி விழாவிற்கு வருகை தருமாறு, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோரை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு கொடுத்தனர்.
இந்திய சுதந்திர போராட்ட வீரரும், பாஞ்சாலங்குறிச்சி மாமன்னருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் 223 வது ஆண்டு நினைவு புகழ் அஞ்சலி விழா கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் அக்டோபர் 16ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்தநிலையில், கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில், அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து புகழ் அஞ்சலி செலுத்த வருகை தருமாறு, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோரை, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு கொடுத்தனர். அப்போது, ஜெயராமன், பழனி உள்ளிட்ட தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் இளைஞரணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.