தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக சிவக்குமார் பொறுப்பேற்றுள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக நேரு பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு, பொறுப்பு முதல்வராக கலைவாணி செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனை மயக்க மருந்து துறை மருத்துவர் சிவக்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின புதிய முதல்வராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் கூறுகையில், "தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும், ரூ.136 கோடி மதிப்பிலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை போன்ற திட்டஙகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வர் சிவக்குமார் இதற்கு முன்னர், திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனை மயக்க மருந்து துறை எச்.ஓ.டி.,யாக பணியாற்று வந்த அவர் பதவி உயர்வு பெற்று, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.