• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மேயருடன் இந்து முன்னணியினர் சந்திப்பு!

  • Share on

தூத்துக்குடியில் கடந்த 7ம் தேதி தசரா திருநாள் அனைத்து அம்பாள்களின் அருட் சப்பர பேரணி, மாவிளக்கு ஊர்வலம்  நடைபெற்றது. 

அதற்கு முன்னதாக இந்து முன்னணி சார்பில் சப்பரம் வீதி உலா வரும் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தூய்மை பணி மற்றும் சாலை சீரமைப்பு, சப்பரம் வந்து செல்வதற்கு வசதியாக சாலையோரங்களில் இருந்த மரக்கிளைகளை அகற்றி தருமாறு இந்து முன்னணி சார்பில் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி தரும் வகையில் நேரடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு செய்து கொடுத்த மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை மாநகராட்சி அலுவலகத்தில், சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர், சப்பர பேரணி கமிட்டி தலைவர் தனபாலன், அமைப்பாளர் சிவக்குமார், பொருளாளர் இசக்கி முத்துக்குமார், பாலசரஸ்வதி, சிட்பன்ட்ஸ் பாலு, கவின் சண்முகம், ஆகியோர் இந்து அமைப்புகளின் சார்பில் சால்வை அணிவித்து பிரசாதம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி.,யுடன் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக நிர்வாகிகள் சந்திப்பு!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் புதிய முதல்வர் பொறுப்பேற்பு!

  • Share on