தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளார் பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக நிர்வாகிகள் மனு அளித்தனர்.
இந்திய சுதந்திர போராட்ட வீரரும், பாஞ்சாலங்குறிச்சி மன்னருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் 223வது நினைவு தினம் அக்டோபர் 16ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இந்தநிலையில், கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில், அக்டோபர் 16ம் தேதி அன்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.
இது தொடர்பாக, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் மாநில பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன், மாநில இளைஞரணி செயலாளர் பூப்பாண்டி ஆகியோர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவனை நேரில் சந்தித்தனர். அப்போது, கயத்தாறு நினைவு நாள் நிகழ்ச்சிக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி மனுவினையும் அவரிடம் அளித்தனர்.
இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் மாநில துணைத்தலைவர் மல்லுச்சாமி, நடராஜன், மாவட்ட இளைஞரணி கட்டபொம்மன் நகர் ஸ்பைக் பாலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.