தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் அம்மன் சப்பரங்கள் பவனி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் 40-வது ஆண்டு அனைத்து சப்பர பவனி மற்றும் 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதமாக பாரத மாதா ஊர்வலம், மாவிளக்கு பேரணி நடந்தது. இந்த சப்பர பவனி தூத்துக்குடி கீழுர் சக்தி விநாயகர் ஆலயம் முன்பு இருந்து தொடங்கியது. பாரத மாதா முன்னே செல்ல, தொடர்ந்து ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் உள்ள சப்பரங்கள் பவனியாக வந்தன. சப்பரபவனி சிவன் கோவில் முன்பு வந்தடைந்தது. அங்கு அனைத்து அம்மன்களுக்கும் பன்னீர் அபிஷேகம் செய்து பட்டுசாத்தி எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.
ஊர்வலத்திற்கு வெங்கடேஷ் சென்ன கேசவன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் கனகராஜ் முன்னிலை வகித்தார். காமராஜ் கல்லூரி செயலாளர் சோமசுந்தரம், பேரணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சிவன்கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், விவேகம் ரமேஷ், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, மாநில இணைச்செயலாளர் பொன்னையா, மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன், திருப்பூர் சண்முகம், சரவணக்குமார், சந்திரசேகர், ஈஸ்வரன், டாக்டர் விமல் ஆனந்த், ராஜசேகர், சப்பர பேரணி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் மாயக்கூத்தன், தலைவர் தனபாலன், அமைப்பாளர் சிவக்குமார், பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம், துணைத்தலைவர்கள் வன்னியராஜ், ராகவேந்திரா, சிவலிங்கம், பொருளாளர் இசக்கிமுத்துக்குமார், செயலாளர்கள் ஆதிநாத ஆழ்வார், மாரியப்பன், பலவேசம், திருப்பதி வெங்கடேஷ், நிர்வாகி கமிட்டி உறுப்பினர்கள் கோபி, செந்தில், சிபு, சரவணக்குமார், ஐயம்பாண்டி, ரகுராம், இசக்கிமுத்து, முருகேசன், சுதாகர், சுடலை, மாவிளக்கு பேரணி கமிட்டி தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் செல்லப்பா, செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஜெயக்கிருஷ்ணன், வக்கீல்கள் செல்வராஜ், நாகராஜ், கருப்பசாமி, இசக்கிலட்சுமி, மகளிர் அணி சாந்தி, பாலம்மாள், தேன்மொழி, உமா, சந்தனக்கனி, ஜானகி, சொர்ணசுந்தரி, செல்வமணி, பல்வேறு கோவில் நிர்வாகிகள் தனுஷ், கண்ணன், கார்த்திக்ராஜா, பழனிச்சாமி, அறிவழகன், சுடலை மாரியப்பன், ராதாகிருஷ்ணன், சீனிவாசன், கீதா செல்வமாரியப்பன், பாபு ஆறுமுகம், உள்பட பலர் கலந்து கொண்டனர். நாராயணராஜ் நன்றியுரையாற்றினார்.