• vilasalnews@gmail.com

கோவில்பட்டி அருகே ரூ.19.17 லட்சம் மதிப்பில் புதிய சாலை : கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்

  • Share on

கோவில்பட்டியையடுத்த பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட ரூ.19.17 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.97 லட்சம் மதிப்பில் பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட காமராஜ் நகர் மேற்கு பகுதியில் பேவர் பிளாக் சாலை, ரூ.9.20 லட்சம் மதிப்பில் பாலாஜி நகர் முதல் தெருவில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை மற்றும் வாருகாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ  திறந்து வைத்தார் 

தொடர்ந்து, ராஜீவ் நகர் பிள்ளையார் கோயில் அருகில் ரூ.12 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, புதிய பைப் லைன் மற்றும் போர் அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் ராஜீவ் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணியையும் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, அதிமுக ஒன்றியச் செயலர் அன்புராஜ், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், முன்னாள் ஒன்றியச் செயலர் போடுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

விளாத்திகுளம் அருகே சரக்கு வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 460 கிலோ கஞ்சா பறிமுதல் - கடத்தல் காரர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சந்திப்பு!

  • Share on