• vilasalnews@gmail.com

கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கிறார்... பாரபட்சமின்றி செயல்படுகிறார்... சபாஷ் வாங்கும் மேயர் ஜெகன் பெரியசாமி!

  • Share on

இந்து முன்னணி சார்பில் வைக்கப்பெற்ற கோரிக்கையை ஏற்று, சிவன் கோயில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடியில் தசரா திருவிழாவை முன்னிட்டு மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், "நவராத்திரி தசரா திருவிழாவில் இறுதி நிகழ்வாக தூத்துக்குடி மாநகரில் உள்ள திருக்கோவில் அம்பாள்களில் அருட்சப்பரபேரணி வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை 3 தினங்கள் நடைபெறுகிறது.  40 ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்வில் வரும் 7ம் தேதி மத்தியபாகம் காவல்நிலையம் அருகிலுள்ள விநாயகர் கோவிலிருந்து அனைத்து திருக்கோவில்களிலும் சப்பரபேரணி மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து சிவன்கோவில் முன்பு ரிஷப வாகனத்தில் எதிர்சேவை நிகழச்சி  நடத்துகிறது. 

மாநகரில் உள்ள பகுதிகளில் நடைபெறும் சப்பர வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் தடையின்றி சிறப்பாக அமைவதற்கு சாலையோரங்களில் உள்ள மரங்களின் கிளைகள் மாநகராட்சி பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் மற்றும் சிவன்கோவில் பெருமாள் கோவில் இடையேயுள்ள கழிவுநீர் ஓடை பள்ளம் ஆகியவற்றை சீரமைத்து தந்து அருட்சப்பரபேரணி சிறப்பான முறையில் நடைபெற உதவிட வேண்டும் என்று,

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் ஒரிரு தினங்களுக்கு முன்பு சந்தித்து இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், அமைப்பாளர் சிவக்குமார், அனைத்து அம்பாள்களின் அருட்சப்பரபேரணி கமிட்டி பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில், இந்து முன்னணி, அம்பாள்களின் அருட்சப்பரபேரணி கமிட்டி ஆகியோரது கோரிக்கைகளை ஏற்று, சப்பரம் வீதி உலா வரும் சிவன் கோயில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை மாநகராட்சி தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்கள் மூலம் தூய்மைபடுத்திடும் பணியை மேற்கொண்டு, அப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தனது கவனத்திற்கு வரும் எந்தவொரு கோரிக்கைகளுக்கும் செவி சாய்த்து கேட்பதோடு, கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பாரபட்சமின்றி உடனுக்குடன் வேகமாகவே செயல்படுகிறார் என்பதற்கு மேற்கானும் நிகழ்வும் ஒன்று என்ற பாராட்டுகள் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு வழக்கம் போல் குவிந்துள்ளது.

  • Share on

தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்கள் - மாப்பிள்ளையூரணி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்!

விளாத்திகுளம் அருகே சரக்கு வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 460 கிலோ கஞ்சா பறிமுதல் - கடத்தல் காரர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

  • Share on