• vilasalnews@gmail.com

தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்கள் - மாப்பிள்ளையூரணி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்!

  • Share on

தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கிராமசபை கூட்டம்  கொத்தனார் காலணி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசுகையில்: 

ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 23 சென்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. அதில் தண்ணீர் தொட்டி உள்பட மக்களுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவுள்ளோம். ஊராட்சி பகுதியில் சாலைகள் போடுவதற்காக 111 கிலோ மீட்டர் தூரம் அளவிடும் பணிகள் நடைபெற்றுள்ளது. புதிதாக பல பகுதிகளில் நீர்தேக்க தொட்டி அமைக்கப்படவுள்ளது. பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடுக்காக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பபட்டுள்ளது. 

தாளமுத்துநகர் பகுதியில் மாநகராட்சி இடம் என கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்பு என்று முள்வேலி அமைக்கப்பட்டிருப்பதை நீக்க முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எல்லா பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை முழுமையாக வார்டு உறுப்பினர்களிடம் அவ்வப்போது கேட்கப்பட்டு அந்த குறைகளை தீர்த்து வைக்க ஊராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்படுகிறது. 

கடந்த காலத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் வரும் காலங்களில் தேங்காமல் தடுப்பது, சில பகுதிகளில் ஆழமான குழிகள் தோண்டப்பட்டு அதன் மூலம் மோட்டார்கள் வைத்து கடலுக்கு அந்த நீரை கொண்டு சேர்க்கவுள்ளோம். எங்களோடு பொதுமக்களும் ஊராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

பின்னர் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், ஊராட்சியின் தனிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், கலைஞர் வீடுவழங்கும் திட்டம் கணக்கெடுப்பு, மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் நடைபெறும் விரும்பதகாத சம்பவங்கள் தடுப்பதற்கும் பொதுமக்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தாளமுத்துநகர் காவல்நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் நியமிக்க வலியுறுத்துதல் உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் குழந்தை வளர்ச்சி திட்ட ஊரகம் அலுவலர் திலகா, மீன்வளத்துறை மேற்பார்வையாளர் சக்திஉடையார், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, வேளாண்மை அலுவலர் ரோஹித்ராஜ், விதைச்சான்று அலுவலர் அபர்ணா, சுகாதா ஆய்வாளர் வில்சன், கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் வினோத், ரேசன்கடை பணியாளர் பிரபாகர், மின்வாரிய பணியாளர் வாசு, ஊரக வளர்ச்சி வாழ்வாதார இயக்க மகளிர்திட்டம் ஒருங்கிணைப்பாளர் அங்காளஈஸ்வரி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலண், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், வசந்தகுமாரி, தங்கமாரிமுத்து, சக்திவேல், தங்கபாண்டி, பெலிக்ஸ், சமூக ஆர்வலர்கள் வக்கீல் மாடசாமி, சங்கரன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, தாளமுத்துநகர் சப்இன்ஸ்பெக்டர்கள் மரிய இருதயம், சதிஷ்குமார், சுடலைமுத்து, மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், தூய மரியன்னை கல்லூரி பேராசிரியர் முனைவர் பரிபூரண செல்வி, தனிப்பிரிவு ஏட்டு முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன், தூய மரியன்னை கல்லூரியின் சமுதாய மேம்பாட்டு திட்டத்தை சார்ந்த விலங்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

குளத்தூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் - அமைச்சர் கீதாஜீவன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கிறார்... பாரபட்சமின்றி செயல்படுகிறார்... சபாஷ் வாங்கும் மேயர் ஜெகன் பெரியசாமி!

  • Share on