• vilasalnews@gmail.com

குளத்தூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் - அமைச்சர் கீதாஜீவன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

  • Share on

குளத்தூர் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கெச்சிலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் காலை 11 மணியளவில் நடைபெற்றது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குளத்தூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டமானது, கெச்சிலாபுரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கிராம வளர்ச்சி குறித்த திட்டங்களை பொதுமக்களிடையே எடுத்துரைத்தார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கிராம சபை கூட்டத்தில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்துதல், பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சியின் வரவு செலவு, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பண்ணை சார்ந்த தொழில்கள் உள்ளிட்டவைகள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் சரவணன், குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வ பாண்டி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகுமார், தங்கவேல் , விளாத்திகுளம் வட்டாட்சியர் சசிகுமார், வருவாய் ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அதிகாரிகள் சேகர், சதீஷ்குமார், ஊராட்சி செயலாளர் காந்தி, குளத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரிச்செல்வி, ஊர் தலைவர் மாரியப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், 

சமூக நலத்துறை திட்ட அலுவலர்,  ஊட்டச்சத்து துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்,  வேளாண்துறை, நடமாடும் மருத்துவ துறை உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் கீதாஜீவனுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு!

தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்கள் - மாப்பிள்ளையூரணி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்!

  • Share on