• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கீதாஜீவனுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு!

  • Share on

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் கீதாஜீவனுக்கு தூத்துக்குடியில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தி.மு.க.வின் 15-வது தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் மாவட்ட செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனுக்கு, தூத்துக்குடி மாநகர எல்லையான எப்சிஐ குடோன் அருகே பாளை ரோட்டில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவனுக்கு மகத்தான வரவேற்பு அளித்தனர். இதையொட்டி தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, 

மாவட்ட அணி நிர்வாகிகள் அன்பழகன், ரமேஷ், பரமசிவம், கஸ்தூரிதங்கம், உமாதேவி, அபிராமிநாதன், மதியழகன், அந்தோணிஸ்டாலின், மோகன்தாஸ் சாமுவேல், ஜெபசிங், வக்கீல் சுபேந்திரன், ஜேசையா, நலம்ராஜேந்திரன், மரியதாஸ், சங்கர், சீனிவாசன், ஆபிரகாம், அந்தோணிகண்ணன், தங்கராஜ், ராமர், சண்முகராஜ், சரவணன், சின்னத்துரை, முருகன், ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கஸ்தூரி, 

மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, ஆனந்தகபரியேல்ராஜ், டேனி, தேவதாஸ், பிரபு, கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர் வினோத், செல்வின், பால்மாரி, ஆர்தர்மச்சாது, பிக்அப் தனபால், அருண்சுந்தர், முத்துராமன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், மெட்டில்டா, பவானிமார்ஷல், ஜான்சிராணி, கண்ணன், இசக்கிராஜா, முத்துவேல், பொன்னப்பன், ராமர், வைதேகி, தெய்வேந்திரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.கே.ராதாகிருஷ்ணன், 

மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், மாநில பேச்சாளர் சரத்பாலா, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீதிகண்ணன், காசிவிஸ்வநாதன், சின்னபாண்டியன், வட்டச்செயலாளர்கள் கீதாமாரியப்பன், கதிரேசன், சுப்பையா, சதிஷ்குமார், பாலு, சுரேஷ், ரவீசந்திரன், கங்காராஜேஷ், ரவீந்திரன், செந்தில்குமார், லியோ ஜான்சன், சந்தனமாரி, அனல்சக்திவேல், சேகர், மூக்கையா, வன்னிராஜ், செல்வராஜ், பொன்ராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, சூர்யா, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், செல்வக்குமார், செந்தில்குமார், அந்தோணிராஜ், கருணா, மணி, அல்பட், மகேஸ்வரசிங், உலகநாதன், பெனில்டஸ், அற்புதராஜ், வக்கீல் மாலாதேவி, மகளிர் அணி இந்திரா, ரேவதி, சந்தியா, அருணாதேவி, பார்வதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் சென்று மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்

  • Share on

மாப்பிள்ளையூரணியில் கண்மாய் தூர்வாரும் பணி - ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்!

குளத்தூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் - அமைச்சர் கீதாஜீவன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

  • Share on