• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணியில் கண்மாய் தூர்வாரும் பணி - ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்!

  • Share on

மாப்பிள்ளையூரணியில் கண்மாய் தூர்வாரும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.

தமிழக அரசு பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலுள்ள பெரிய சிறிய குளங்கள் அனைத்தையும் மழைகாலத்திற்கு முன்பு முழுமையாக தூர்வாறுதல் உள்ளிட்ட பாராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, பொதுமக்களுக்கான குடிநீர் தேவை,  விவசாயம், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் அதிக அளவில் தேக்கி வைக்க வழிவகை செய்திட வேண்டும் என்று கூறியுள்ளது.

அதனைத்தொடர்ந்து, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,  அமைச்சருமான அனிதாராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள குளம், கண்மாய்களை, தூர்வாரி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்  48லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான தொடக்க பணியின் பூஜையை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன்சங்க தலைவரும், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், பாரதிராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மாப்பிள்ளையூரணி ஊர்தலைவர் ராமமூர்த்தி, மற்றும் கௌதம், உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பக்தர்கள், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் - எஸ்பி., அறிவிப்பு!

தூத்துக்குடியில் கீதாஜீவனுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு!

  • Share on