தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரவுடி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று (24.09.2022) வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்ட போது அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி வடக்குராஜா தெருவைச் சேர்ந்த கென்னடி மகன் சுதர்சன் (28), மணப்பாடு வேளாங்கன்னி மாதாதெருவைச் சேர்ந்த ஓடிலோ மகன் சந்தோஷ் (41), தூத்துக்குடி தேவர்காலனியைச் சேர்ந்த சந்தனபாண்டியன் மகன் அய்யாத்துரை (எ) சுரேஷ் (33) ஆகியோர் என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதே போன்று மேற்படி போலீசார் ரோந்து சென்ற போது தூத்துக்குடி 1வது இரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி வடக்குராஜா தெருவைச் சேர்ந்த கென்னடி மகன் சிம்சன் (26), தூத்துக்குடி சக்தி நகரைச் சேர்ந்த தங்கமாரியப்பன் மகன் பலவேசம் (எ) செல்வம் (27), தூத்துக்குடி 3செண்ட் அந்தோனியார்புரத்தைச் சேர்ந்தவர்களான சண்முகவேல் மகன் மீரான் (எ) மூர்த்தி (21) மற்றும் முத்துகுமார் மகன் தட்சணாமூர்த்தி (19) ஆகியோரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் சுதர்சன், சந்தோஷ், அய்யாத்துரை (எ) சுரேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 3 கிலோ 300 கிராம் கஞ்சா, ரூபாய் 13,750 பணம் மற்றும் TN59CA5059 – Royal Enfield என்ற இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தும், மேற்படி சிம்சன், பலவேசம் (எ) செல்வம், மீரான் (எ) மூர்த்தி, தட்சணாமூர்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 3 கிலோ 500 கிராம் கஞ்சா, ரூபாய் 13,750 பணம் மற்றும் TN69BJ9135 Yamaha Fascino என்ற இருசக்கர வாகனம் என மொத்தம் 6கிலோ 800 கிராம் கஞ்சா, ரூபாய் 27,50O ரொக்கப் பணம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.