தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஓட்டுநர்களுக்கு, மருத்துவம், குடிநீர், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்தி தர வேண்டும்.
அதே போல், தூத்துக்குடி துறைமுகம், தெர்மல் பவர் பிளாண்டுகளில் லோடு ஏற்ற செல்லும் ஓட்டுநர்களுக்கு குடிநீர், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே, அங்கு குடிநீர், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
சாலையில் வாகனம் திடீரென்று பழுதாகி வழியில் நின்றால், அதனை உடனே அகற்ற வேண்டும் என நெருக்கடி நிலையை உருவாகி மன உளச்சலை ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் ஏற்படுத்துகின்றனர். காவல்துறையினரின் இத்தகைய போக்கு மாற்றப்பட வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் நிறுத்தி வாகனங்களில் ஓட்டுநர் தாக்கப்பட்டு, அவர்களின் பணம், செல்போன் உள்ளிட்டவைகள் பறிக்கப்படும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதால். ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிறது. எனவே, நெடுஞ்சாலை காவல்துறையினரின் ரோந்தை தீவிரப்படுத்தி, ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான நிலையை ஏற்படுத்தி தர வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.