ஜூலை 11 ஆம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து என்றும் சென்னை ஐகோர்ட் இன்று வழங்கிய தீர்ப்பை வரவேற்று எட்டையபுரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு ஆலோசனையின் பேரில், எட்டையபுரத்தில் அதிமுக சார்பில், நகரச் செயலாளர் ராஜ குமார் தலைமையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் சுப்புலட்சுமி, வேலுச்சாமி அவைத்தலைவர் சேனா கணபதி, காட்டன் பிரபு, முனியசாமி, கருப்பசாமி உட்பட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.