• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்!

  • Share on

தூத்துக்குடி 3வது மைல் அருகே திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம், பால் அபிஷேகம் நடைபெற்றது. 

மேல்மருவத்தூர் அருட்பெருந்தெய்வம் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி 3வது மைல் அருகே திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் மழைவளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், தொழில்வளம் பெருகவும், கல்வி அறிவு சிறக்கவும் வேண்டி அதிகாலையில் குரு பூஜை, வினாயகர் பூஜையுடன் துவங்கியது. முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஆன்மிக கஞ்சி கலய‌ ஊர்வலத்தை தர்மகர்த்தா அய்யம்பெருமாள் துவக்கி வைத்தார். 

ஆன்மிக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சக்திபீடத்தை வந்தடைந்து அன்னைக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. ஆதிபராசக்தி சித்தர் பீட பிரச்சார உறுப்பினர் பேராசிரியை இந்திராகாந்தி ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து உலக மக்கள் தொற்று நோயிலிருந்து விடுபட வேண்டி கருவறை அன்னைக்கு பக்தர்கள் பால் அபிஷேக நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து சமுதாய நலத்திட்ட உதவியாக ஏழை மாணவிக்கு கல்வி உதவி தொகை மற்றும் சேலைகளை கூட்டுறவு பண்டகசாலை பொதுமேலாளர் கந்தசாமி வழங்கினார். அன்னதானம் மற்றும் அருட்பிரசாதம் வழங்கும் பணியை அனல்மின் நிலைய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தொடங்கி வைத்தார். 

விழாவில், ஆன்மிக இயக்க மாவட்ட பொருளாளர் கண்ணன், இளைஞர் அணி செல்லத்துரை, வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ணநீலா, பிரச்சார செயலாளர் முத்தையா, சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, மகளிர் அணி பிரமிளா, பத்மா, செல்வி, வட்ட தலைவர்கள் வண்டிமலையான், செல்வம், கோவில்பட்டி மன்ற பொருளாளர் கற்பகவள்ளி, கழுகுமலை மன்ற தலைவர் அழகர், ஆத்தூர் மன்ற தலைவி மீனாட்சிபாலா, புதுக்கோட்டை மன்ற தலைவர் மாயாண்டி, அய்யனார் காலனி மன்ற தலைவர் காசியம்மாள், கான்சாபுரம் மன்ற தலைவி கனகா, தளவாய் புரம் மன்ற தலைவர் ராஜூ, அழகேசபுரம் மன்ற தலைவி தங்கம், குளத்தூர் செல்வம், எட்டையாபுரம் கன்னா, சக்திபீட இளைஞர் அணி மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் தூய்மை பணி - ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் கானாமல் போன பள்ளி மாணவன் : புகார் கொடுத்த ஒருமணி நேரத்தில் கண்டுபிடித்த எஸ்ஐ.,க்கு குவியும் பாராட்டு!

  • Share on