தூத்துக்குடியில் இன்று (26ம் தேதி) மண்டல அளவிலான காங்கிரஸ் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு, தூத்துக்குடி இரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காங்கிரஸ் சார்பில் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வருகிற 7ம் தேதி ராகுல் காந்தி எம்பி நடை பயணத்தை துவங்குகிறார். இது குறித்த மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் இன்று நடக்கிறது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து தலைமை வகிக்கிறார்.
இதற்காக, சென்னையில் இருந்து இரயில் மூலம் தூத்துக்குடிக்கு இன்று காலை வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.