மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான பீரித்தா தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சுபாஷினி, குழந்தை நலக் குழுவின் உறுப்பினர் சிதி ரம்ஜான், மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார், செயலாளர் ஜெயக்குமார், வார்டு உறுப்பினர்கள் பாரதிராஜா மற்றும் ராணி, சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் பணியாளர்கள் நம்பி ராஜன் , பால்செல்வம் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.