• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பணியிடைப்பயிற்சி!

  • Share on

தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றம் மற்றும் ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி இணைந்து தூத்துக்குடி மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பணியிடைப் பயிற்சி 23.08.2022 மற்றும் 24.08.2022 ஆகிய இரண்டு நாட்கள் ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

முதுநிலை அறிவியல் மற்றும் வேதியியல் ஆராய்ச்சித்துறைத் தலைவர் மற்றும் பணியிடைப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோகிலா சுபத்ரா கிறிஸ்டி  வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பால ஷண்முக தேவி தலைமையுரையாற்றினார்.

தூத்துக்குடி மாவட்டமுதன்மை  கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி வாழ்த்துரை வழங்கினார். பயிற்சி கையேடு ‘அடிப்படை அறிவியல்’ என்னும் நூலின் முதல் பிரதியை கல்லூரியின் முதல்வர் முனைவர் பால ஷண்முக தேவி வெளியிட மாவட்ட முதன்மை  கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி பெற்றுக் கொண்டார். பயிற்சியின் இறுதியில் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் சொர்ணலெட்சுமி நன்றி கூறினார். 

இந்நிகழ்வில், உதவி திட்ட அலுவலர் பெர்சியாள் ஞானமணி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்  முனியசாமி, ஐம்பது பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியப் பயிற்றுநர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை முதுநிலை அறிவியல் மற்றும் வேதியியல் ஆராய்ச்சித்துறையின் அனைத்துப் பேராசிரியர்களும் இணைந்து செய்திருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் நாளை மண்டல காங்கிரஸ் கலந்தாய்வு கூட்டம் - கே.எஸ்.அழகிரி பங்கேற்கிறார்!

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம்!

  • Share on