தூத்துக்குடியில் நாளை (26ம் தேதி) மண்டல அளவிலான காங்கிரஸ் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. இதில் தமிழ்நாடு காங். தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்கிறார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் கூட்டாக வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் சார்பில் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வருகிற 7ம் தேதி ராகுல் காந்தி எம்பி நடை பயணத்தை துவங்குகிறார். இது குறித்த மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டம் நாளை (வெள் ளிக்கிழமை) தூத்துக்கு டியில் நடக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை வகிக்கிறார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், கன்னியாகுமரி எம்பி விஜய்வசந்த், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், திருநாவுக்கரசர் எம்பி., மாநில துணை தலைவர் ஏபிசிவி சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட தலைவர்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதி கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.