• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வேலை வாய்ப்பு முகாம்!

  • Share on

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குனர் பேச்சியம்மாள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறயிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. 

முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ, மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். தகுதியுள்ள, தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதிவு ரத்து ஆகாது தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் நிறுவனத்தினரும் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய முகாமில் கலந்து கொள்ளலாம்.

முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • Share on

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்: ஆட்சியர் தகவல்!

உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வங்கி கணக்கில் வரவு வைப்பு !

  • Share on