• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மாஸ் கிளீனிங் - ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்!

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நடைபெற்ற மாஸ் கிளீனிங் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட, ராஜபாளையம், தாளமுத்துநகர், மாதாநகர், வடக்கு சோட்டையன் தோப்பு,  உள்ளிட்ட பகுதிகளில் 2 கிலோ மீட்டர் தூரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மூலம் மாஸ் கிளீனிங் பணியை ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கபாண்டி, பெலிக்ஸ்,  மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், மற்றும் கௌதம், பல்வேறு தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கூறுகையில், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது கிராம ஊராட்சி தான். ஊராட்சி வளர்ச்சி மூலம் தான் நாட்டின் வளர்ச்சியும் அமையும் என்று தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுரையின் படி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும்  அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி மாப்பிள்ளையூரணி ஊராட்சியை மாவட்டத்தில் தன்னிலை பெற்ற வளர்ச்சியடைந்த ஊராட்சியாக மாற்றுவதற்கு அனைத்து பணிகளையும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மாஸ் கிளீனிங் - ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்!

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்: ஆட்சியர் தகவல்!

  • Share on