தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி டூவிபுரம் 3 ஆவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகநயினார். அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் தற்போது அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற மாநில இணைச் செயலராக உள்ளார்.
இவரது வீட்டில் நேற்று ( திங்கள்கிழமை ) நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இவரது உறவினர் லட்சுமணன் என்பவர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான அதிமுக பிரமுகர் ஒருவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது