• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நிலத்தரகர்கள் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா!

  • Share on

தூத்துக்குடியில், தேசிய ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத்தரகர்கள் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது

தூத்துக்குடி வடக்கு ரத வீதியில், தேசிய ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத்தரகர்கள் நலச்சங்கத்தின் 15ம் ஆண்டு விழா, மாநில, மாவட்ட தொகுதி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு முத்துராமன் தலைமை வகித்தார். சேகர் முன்னிலை வகித்தார். சங்கர் வரவேற்புரையாற்றினார். மாநில தலைவர் விருகை கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, மாவட்ட புதிய தலைவராக சேகர், செயலாளராக முத்துராமன், பொருளாளராக கார்த்திகேயன், இணைச்செயலாளராக மாதவி, மாநில அமைப்பு செயலாளராக முருகன், தூத்துக்குடி தொகுதி தலைவராக சங்கர்,  ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

விழாவில் மாநில துணைத்தலைவர் ஐயப்பன், இணைச்செயலாளர் சுரேஷ்குமார், மற்றும் கணேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புதிய நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை!

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

  • Share on