• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை!

  • Share on

கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே திட்டங்குளம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக பொன்ராஜ் ( வயது 63 ) என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று மதியம் தெற்கு திட்டங்குளம் காலனி பகுதியில் உள்ள தோட்டத்திற்கு விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற போது, அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து போட்டு விட்டு தப்பிச் சென்றனர். 

இதனையடுத்து, தகவல் அறிந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • Share on

தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருக்கு வாழ்த்து!

தூத்துக்குடியில் நிலத்தரகர்கள் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா!

  • Share on