தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாரை திமுக நிர்வாகிகள் உள்பட பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாருக்கு,
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், ஸ்டாலின், வசந்தகுமாரி, தங்கபாண்டி, மகேஸ்வரி, ஜுனத்பீபி, பாலம்மாள், சக்திவேல், பாண்டியம்மாள், கதிர்வேல், உமாமகேஸ்வரி, ஜேசுராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலன், தொம்மை சேவியர், கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், திமுக கிளைச் செயலாளர்கள், திமுக பல்வேறு அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.