தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வாலிபரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணகுமார் (29), கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு புதிய பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது, அங்கு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர்.
இச்சம்பவம் அறிந்து, தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், துாத்துக்குடி டவுன் டி.எஸ்.பி., சத்தியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வட பாகம் காவல்நிலல போலீசார் வழக்குப்ப திவு செய்து கொலை குறித்து விசாரித்து வருகின்றனர். முன் விரோதத்தால் நடந்துள்ளதாக கூறப்படும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.